Aran Sei

உ.பி. தேர்தல் பரப்புரையில் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும் சர்ச்சை பேச்சுகள் – பாஜக வேட்பாளர்மீது வழக்கு

த்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் மீரான்பூர் தொகுதி வேட்பாளர்மீது தேர்தல் பரப்புரையின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு பதியப்பட்டுள்ளது என்று உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று(ஜனவரி 2) அனுமதியின்றி கூட்டத்தை நடத்தியதற்காக பெர்ஷாந்த் குஜ்ஜார் மற்றும் அவரது நாற்பது ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று கக்ரோலி காவல்நிலைய அதிகாரி சுனில் சர்மா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அனைத்து வகையான பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ள நிலையில், இந்த பரப்புரைக் கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் : சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

பெர்ஷாந்த் குஜ்ஜார் பரப்புரை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான காணொளி ஒன்றில், “பாஜக இந்துக்களின் கட்சி. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி இஸ்லாமியர்களின் கட்சி. அதனால் தேர்தலில் என்னை ஆதரியுங்கள்” என்று சோரவாலா கிராமத்தில் உள்ள மக்களிடம் பெர்ஷாந்த் குஜ்ஜார் வேண்டுகோள் விடுக்கிறார்.

இக்காணொளி குறித்து விசாரித்த பின்னரே, குஜ்ஜார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டது என்றும் குஜ்ஜார் உரையாற்றும் தேர்தல் பரப்புரைக் கூட்டமானது, மாவட்ட அதிகாரிகளின் அனுமதியின்றியும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறியும் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் கக்ரோலி காவல்நிலைய அதிகாரி சுனில் சர்மா கூறியுள்ளார்.

டைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 80 விழுக்காடு பேருக்கும், 20 விழுக்காடு பேருக்கும் இடையிலான தேர்தல் என்று கூறிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்  தெரிவித்திருந்தன.

உத்தர பிரதேச மாநிலத்தில் 80 விழுக்காடு இந்துக்களும், 20 விழுக்காடு இஸ்லாமியர்களும் உள்ளனர் என்பதை குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியிருந்தார்.

‘உ.பி., தேர்தல் 80 விழுக்காட்டிற்கும் 20 விழுக்காட்டிற்கும் இடையிலானது’- ஆதித்யநாத்தின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஜனவரி 8 அன்று, தூர்தர்ஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள யோகி ஆதித்யநாத், “உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரைவத் தேர்தல் என்பது 80 விழுக்காட்டிற்கு, 20 விழுக்காட்டிற்கும் இடையிலான தேர்தல் ஆகும். 80 விழுக்காடு ஆதரவாளர்கள் ஒருபுறமும், 20 விழுக்காடு பேர் மருபுறமும் இருக்கிறார்க்ள். 80 விழுக்காடு பேர் சாதகமான மனநிலையுடன் முன்னோக்கி செல்கிறார்கள். ஆனால், 20 விழுக்காடு பேர் எதிர்மனநிலையுடன், தொடர்ந்து எதிர்க்கிறார்கள். இதில் பாஜகதான் வெல்லும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

யோகி ஆதித்யநாத்தின் இக்கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, “80 விழுக்காடு, 20 விழுக்காடு என்று ஆதித்யநாத் பேச்சு, வகுப்புவாத பிரச்சனையை உருவாக்கும் நோக்கோடு பேசப்பட்டது. இதை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். தேர்தலில் இந்துகள், இஸ்லாமியர்கள் எனும் பேச்சுக்கே இடமில்லை. ஜனநாயகத்தைக் காக்கவே மக்கள் வாக்களிப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

Source: NDTV, PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்