Aran Sei

உ.பி., தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு – விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

த்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளிப்பதாக விவசாயிகள் அமைப்பான ராஷ்ட்ரிய கிசான் மஞ்ச் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்று (பிப்பிரவரி 23), ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (பிப்பிரவரி 23), சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ராஷ்ட்ரிய கிசான் மஞ்சின் சார்பாக அதன் தேசியத் தலைவர் சேகர் தீட்சித் எழுதியுள்ள கடிதத்தில், சமாஜ்வாதி கட்சிக்கு முழு ஆதரவை வழங்க தனது அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பசுவை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் – உ.பி. மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்

“ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்யாமல், சமரசம் செய்வதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது கெடுவாய்ப்பானது. மக்களிடையே மத வெறியை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்கிறது. ஆளும் பாஜக கட்சி கிழக்கிந்திய கம்பெனி போல் நடந்து கொள்கிறது. பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய விவசாயிகள் அமைப்புகளில் ராஷ்ட்ரிய கிசான் மஞ்ச்சும் ஒரு முக்கிய அமைப்பாகும். ஒன்றிய அரசின் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம், கிழக்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

லக்கிம்பூர் கெரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், நான்கு விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவமும் விவசாயிகளிடையே பாஜகவிற்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்