Aran Sei

உ.பி.,யில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் – விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

த்திரபிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினரான மயங்கேஷ்வர் சரண் சிங், இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்பு பேச்சுக்களைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள தேர்தல் ஆணையம் 24 மணிநேரத்தில் பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.

“இஸ்லாமியர்களின் தாடியை மழித்து இந்து மதத்திற்கு மாற்றப் போகிறேன். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இங்கு வாழ விரும்பினால் இந்து மத முழக்கங்களை சொல்ல வேண்டும், இல்லையெனில் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்று மயங்கேஷ்வர் சரண் சிங் பேசியுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாஜகவை எதிர்கொள்ள மூன்றாவது அணி – சந்திரசேகர ராவ் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு

அமேதியில் உள்ள திலோய் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளரான மயங்கேஷ்வர் சரண் சிங் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மயங்கேஷ்வர் சரண் சிங் மீது இது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கைப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் மயங்கேஷ்வர் சரண் சிங் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், தேர்தல் ஆணையம் இதற்குரிய உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்