உத்தரபிரதேசத்தில் நடந்த பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக அரசு , வாக்காளர்களைக் கடத்திச் சென்று, அவர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், “பாஜக அவர்களது தேர்தல் தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு வாக்காளர்களைக் கடத்தி , காவல்துறை மற்றும் அதிகாரிகளின் துணையோடு வாக்களிப்பதை தடுத்தனர் ” என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் அனைத்துக் கூறுகளையும் கேலிக் கூத்தாகும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, பாஜகவின் இந்த மோசடிகளுக்கு வரும் சட்டமன்ற தேர்தல் மக்கள் உரிய பதிலளிப்பார்கள் என்றும், சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைந்ததும் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோபம் பாஜகவின் அகங்காரத்தை உடைக்கும் – வேளாண் சட்டம் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து
இந்நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதுவே ஆளும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.