Aran Sei

உ.பி யில் பட்டியலின மாணவர்களின் தட்டுகளைத் தொடமறுத்த ஊழியர்கள் பணிநீக்கம்- புகார் அளித்தவரை மிரட்டிய ஆதிக்க சாதியினர்

த்தரப்பிரதேச மாநிலத்தில் அரசுப்பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்களின் தட்டுகளைத் தனியே வைத்தது தொடர்பாக புகாரளித்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவருக்கு  ஆதிக்க சாதியினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தாவுதாபூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிடக்கூடிய பட்டியிலின மாணவர்களின் தட்டுகள்  சமையலறையில் வைக்கப்படாமல்  தனியே வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஊழியர் பட்டியலின மாணவர்களே தட்டுகளை தொட மறுத்ததால், மாணவர்களே தட்டுகளைக் கழுவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு – மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம்.

இது தொடர்பாக பட்டியலின சமூகத்தைச் சார்ந்த தாவுதாபூர் கிராம ஊராட்சித் தலைவர் மஞ்சு தேவியின் கணவர் சாஹப் சிங் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியைப் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய H.ராஜா- மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம்.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள சாஹப் சிங், தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுடப்போவதாகவும், எலும்புகளை உடைத்து விடுவதாக மிரட்டியுள்ளதாகவும், அவரை சாதி ரீதியாக இழிவுப்படுத்ததும் வகையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

தாவுதாபூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 60 மாணவர்கள் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகும். இந்நிலையில், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தட்டுகள் மட்டுமே சமையல் அறையில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புகாரையடுத்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பட்டியிலின மாணவர்களின் தட்டுகளைத் தொட மறுத்த இரண்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SOURCE: THE WIRE

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்