Aran Sei

உ.பி: காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை வெளிக்கொண்டு வந்த காவலருக்கு தண்டனையாக 600 கிமீ தொலைவில் இடமாற்றம்

த்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படும் பிரச்சினை தொடர்பாக காணொளி வெளியிட்ட கான்ஸ்டபிள் மனோஜ் குமாருக்கு தண்டனையாக பிரோசாபாத்தில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காசிப்பூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

26 வயதான கான்ஸ்டபிள் மனோஜ் குமார், தனது கண்களில் கண்ணீருடனும், கையில் உணவு தட்டு வைத்துக் கொண்டு வெளியிட்ட காணொளி காவல்துறையினருக்கு மோசமான உணவுகள் வழங்கப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதற்கு தண்டனையாக மனோஜ் குமார் நீண்ட கால விடுப்பில் அனுப்பப்பட்டார்.

‘மாற்றுக் கருத்துடையவர்களை கைது செய்யும் பாஜக – உத்தரபிரதேச காவல்துறையால் முதியவர் கைது செய்தது குறித்து உறவினர்கள் ஆதங்கம்

12 மணி நேர கடமைக்குப் பிறகு காவல்துறையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக அவர் அந்த காணொளியில் பதிவு செய்திருந்தார். “ஒரு நாய் கூட இதை சாப்பிடாது. எங்கள் வயிற்றில் எதுவும் இல்லையென்றால் நாங்கள் எப்படி வேலை செய்ய முடியும்?” என்று அவர் அந்த காணொளியில் கூறியிருந்தார்.

அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் கூறுகையில், “எனது குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு திருமணமாகாத சகோதரி உட்பட மொத்தம் ஆறு பேர் உள்ளனர். என் பெற்றோர் வயதானவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடமிருந்து 600 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள இடத்தில் வேலை செய்வதன் மூலம் அவர்களை கவனித்துக்கொள்வது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். என் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள் நான்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம்: ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேருக்கு பிடிவாரண்ட் – கடந்த ஆண்டு பதியப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை

மனோஜ் குமாரை போன்ற ஒரு நேர்மையான மனிதர் ஒரு உண்மையான பிரச்சினையை எழுப்பியதற்காக கஷ்டப்படுவது வருத்தமளிக்கிறது. அவர் ஒரு ஏழ்மையான பின்னணியிலிருந்து வருகிறார், அவரது இரண்டு சகோதரர்களும் இன்னும் தினக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். உண்மையில், மனோஜ் தனது கல்வியைத் தொடர முடியாமல் ஒரு குழந்தைத் தொழிலாளியாகவும் பணியாற்றியவர்” என்று காவல்துறையில் இருக்கும் மனோஜ் குமாரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

மனோஜ் குமாரின் காணொளி வைரலானதை தொடர்ந்து பிரோசாபாத் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறையினருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சரிபார்க்க உத்தரவிட்டார். உத்தரபிரதேசத்தில் மற்ற மாவட்டங்களிலும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : newindianexpress

A Raja Speech on Manusmriti is 100% Correct – Dr Sharmila | A Raja Speech About Manusmriti | Shudras

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்