உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், மாடுகள் மீது பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படத் தொடங்கியுள்ளார் என்றும் அதே நேரத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் உள்ள மாட்டுத்தொழுவங்களின் அவலநிலை குறித்து மௌனம் சாதித்து வருகிறார் என்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் குமார் லாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று முன் தினம்(டிசம்பர் 23), உத்தரபிரதேச மாநில வாரணாசியில், பால்வளத் திட்டம் உள்ளிட்ட 27 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, மாடுகளையும் எருமைகளையும் கேலி பொருளாக்குபவர்கள் எட்டு கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இக்கால்நடைகளைச் சார்ந்து இருப்பதை மறந்து விடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், “மாடுகளைக் குறித்து பேசுவதும், கோவர்தன்(கிருஷ்ணர்) குறித்து பேசுவதும் சிலரால் பாவகரமான விஷயமாகிவிட்டது. மாடு சிலருக்கு பாவகரமானதாக இருக்கலாம். ஆனால், நமக்கு அது தாய். புனிதம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
‘மாடுகளுக்கு ஆம்புலன்ஸ்; அழைத்த 20 நிமிடங்களில் வரும்’- உ.பி கால்நடை துறை அமைச்சர் அறிவிப்பு
பிரதமரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அஜய் குமார் லாலு, “கடந்த நான்கரை ஆண்டுகளில், யோகி ஆதித்யநாத் அரசும் மோடி அரசும் ‘கௌசாலாக்களில்’ (மாட்டுத்தொழுவங்களில்) மாடுகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், மோடி அரசு மாடுகள் மற்றும் கால்நடைகள் குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்ர்.
“மாடுகள் மதிப்பிற்குரியவை என மக்களிடம் மோடி ஜி கூறுகிறார். இது யாருக்குதான் தெரியாது? மாட்டுத் தொழுவங்களில் உள்ள மாடுகள் சந்தித்து வரும் அவலங்களை சரி செய்ய உத்தரபிரதேச அரசு என்ன செய்தது என்பதை மோடி ஜி சொல்ல வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அம்மாடுகளின் மோசமான நிலை குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பினார் என்றும் ஆனால் யோகி ஆதித்யநாத்தின் பாஜக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை என்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் குமார் லாலு குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.