Aran Sei

இந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு – யோகி ஆதித்யநாத்

ந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமாயண கலை களஞ்சிய மின்னூல் முதல்பதிப்பின் வெளியீட்டு விழாவில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியதாகவும், அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது ராமாயண கலைக்களஞ்சியம் வெளியிடப்படுவது கூடுதல் மகிழ்ச்சி என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்

மேலும், மதசார்பின்மை இந்திய பாரம்பரியத்துக்கு சாபக்கேடு என்றும், இந்தத் தேசத்தைத் தங்கள் சுயலாபத்திற்காகத் தவறாக வழிநடத்துபவர்களையும், துரோகம் செய்பவர்களையம் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் கம்போடியா சென்றபோது அங்கோர்வாட் கோவிலில் சந்தித்த புத்தத் துறவி, இந்து மதத்திலிருந்தே புத்த மதம் தோன்றியது என்று கூறியதாக அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மதமாற்ற தடைச் சட்டம்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு சவாலாக விளங்கும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

மேலும் ராமாயண, மகாபாரத கதைகள் சிறந்த வாழ்க்கைப்பாடம் எனவும். அதுமட்டுமல்லாது இந்தியாவின் எல்லை எதுவரை நீண்டிருந்தது என்பது இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ராமாயண காலத்தில் பாகிஸ்தானை ஆண்டது ராமனின் தம்பியின் மகன் எனவும் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளாரெனத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமாயண கலைக்களஞ்சியம் வெளியிடப்படுவதின் மூலம் ராமனின் புகழை உலகுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் அந்த உரையில் கூறியுள்ளார் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான ட்வீட் : எஃப்ஐஆரை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

ராமாயண கலைக்களஞ்சியத்தின் முதல் பதிப்பானது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதை கரக்பூர், ஐ.ஐ.டி வடிவமைத்துள்ளது எனவும் தொடர்ந்து தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில கலை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் கூட்டிணைந்து ராமாயணத்தை உலக அளவில் கொண்டு செல்ல இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்