Aran Sei

உ.பி முதல்வர் கோவை வருகை : கலவர கலாச்சாரத்தை கையிலெடுக்கும் பாஜக வேட்பாளரை தகுதி நீக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

லவர அரசியல் கலாச்சாரத்தை கையில் எடுக்கும் பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இதில் தமிழக தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

நேற்று (மார்ச் 31), கோவை மாநகர பகுதியில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  பரப்புரையில் ஈடுபட வந்துள்ளார்.

அவரை வரவேற்க பாஜகவினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக கோவை நகர் வீதிகளில் சென்றுள்ளனர். அப்போது, ஒப்பணக்கார வீதியில் சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள், அங்கிருந்த கடையை மூட வலியுறுத்தி கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

டெல்லி கலவரம் – முஸ்லீம்களை தாக்க கலவரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா?

மேலும், பாஜக கட்சிக் கொடி கட்டப்பட்ட தடிகளால் வியாபாரிகள் சிலரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, உக்கடம் காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ இருசக்கர வாகனங்களில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை பின்தொடர்ந்து வந்த, பாஜக உறுப்பினர்கள், டவுன்ஹால் பாட்டா ஷோரூம் அருகில் இருந்த வியாபாரிகளை கொடிக்கம்ப தடிகளால் தாக்கி, அங்கு இருந்த கடைகளின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு டெல்லி வெறுப்பு கலவரம் – தம் வாழ்வையும் பிறர் வாழ்வையும் மீட்ட பாதிக்கப்பட்ட பெண்கள்

“தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட பாஜக கட்சியினர் மற்றும் வேட்பாளர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவர அரசியல் கலாச்சாரத்தை கையில் எடுக்கும் பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதில் தமிழக தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊர்வலம் டவுன்ஹால் பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த இஸ்லாமியர்களைக் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பாஜகவினர் செய்த அடாவடிகள் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாகின. இந்த சம்பவத்தினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல் ஹாசன் கண்டித்திருந்தார். கலவர ஸ்பெலிஷ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம் என இந்தச் சம்பவம் குறித்து அவர் ட்வீட் செய்திருந்தார்.” என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? – விரிவான புலனாய்வின் இரண்டாம் பகுதி

“இந்நிலையில் கலவரக்காரர்கள் மிரட்டப்பட்ட வி எம் காலனியகம்   என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்று கடைக்காரரைச் சந்தித்து தனது ஆதரவினை கமல் தெரிவித்தார். அந்தக் கடையில் தனக்கு காலனிகளும் வாங்கிக்கொண்டார். அப்போது கடை வீதியை சேர்ந்த வணிகர்கள் ஒன்றுதிரண்டு கமல்ஹாசனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும்  வருத்தத்துடன்  தெரிவித்தனர்.” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

’அப்பாவி நபர் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார் ’ – டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான எஸ்.நாகராஜனிடம் கோவை மாவட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் அளித்த புகார் மனுவில், பாஜகவின் இதுபோன்ற பிரச்சாரங்கள் கோவையில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தி, அதை மத மோதல்களாக மாற்றி, தான் வெற்றி பெற்று விடலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே இது நடந்ததாக தெரிகிறது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“இதுபோன்றவற்றால் கோவையில் உள்ள ஜவுளித்துறைகள், நகைக்கடை, தொழில்கள் உட்பட பல்வேறு வியாபாரிகள் மற்றும் வியாபார தலங்கள் பாதிக்கும் சூழல்கள் உருவாகும். இவ்விவகாரம் தொடர்பாக பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.” என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்