உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு பாஜகவைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 30), மதுராவில் நடைபெற்ற கிருஷ்ணா ஜெயந்தி விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அவர், “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசித்து மது மற்றும் இறைச்சி விற்பனையைத் தடை செய்வதற்கும் வர்த்தக ரீதியாக இத்தகைய நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுவதை தடுக்கவும் உரிய திட்டங்கள் தயாரிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
“மது மற்றும் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மதுராவின் பெருமையை காக்கும் வகையில், பால் விற்பனையை மேற்கொள்ளலாம். பிரிஜ் பூமியை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதற்கான நிதியில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. இப்பகுதியின் வளர்ச்சிக்காக நவீன தொழில்நுட்பத்தோடு பண்பாட்டையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் இணைக்கவுள்ளோம்.” என்று யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
பிரிஜ் பூமி என்பது யமுனை நதிக்கரையில் உள்ள பகுதிகளை குறிக்கும். இப்பகுதியானது உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த சில மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்து இதிகாசங்களின்படி, கிருஷ்ணர் பரிஜ் பூமி பகுதியில்தான் பிறந்து, வளர்ந்தார்.
கொரோனா பெருந்தொற்றை அகற்ற யோகி ஆதித்யநாத் கிருஷ்ணரை வேண்டிக்கொண்டுள்ளார்.
Source: PTI
தொடர்புடைய பதிவுகள்:
உச்சம் தொடும் மாடுகளின் மீதான கரிசனம்: மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
மதமாற்ற தடைச் சட்டம்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு சவாலாக விளங்கும் அலகாபாத் உயர்நீதி மன்றம்
‘உத்தரகண்ட்டிற்கு முதலமைச்சர் வேண்டுமா? யோகி ஆதித்யநாத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ – அகிலேஷ் யாதவ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.