Aran Sei

உ.பி இடைத்தேர்தல்: வாக்களிக்க விடாமல் காவல்துறையினர் தடுப்பதாக இஸ்லாமிய வாக்காளர்கள் குற்றச்சாட்டு

Credit: The Wire

த்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் ராம்பூர்  நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்கு சாவடிக்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுப்பதாக இஸ்லாமிய வாக்காளர்களை குற்றம்சாட்டியுள்ளனர்.

ராம்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை ஏற்கும் காவல்துறையினர், கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், எந்த நடவடிக்கையினரையும் குறிப்பிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை

தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக காவல்துறையினரும் உள்ளூர்வாசிகளும் தெரிவித்துள்ளனர்.

சுவார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தரியல் பகுதியில் இருந்து பதிவேற்றப்பட்ட காணொளியில், மாநில கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரியால் அறையப்பட்டதாகவும் ஒருவர் கூறியது பதிவாகியிருந்தது.

இந்த காணொளியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மில்லத் டைம்ஸ் செய்தி நிறுவனம், “காணொளியில் காணப்படும் நபர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், சம்பவம்குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம்: மகனை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சுட்டுக் கொன்ற காவல்துறை

இது போன்ற குற்றச்சாட்டுகள் சுவார் சட்டமன்றத் தொகுதியின் கோட்வாலி தண்டா பகுதியில் இருந்தும் பதிவாகியுள்ளன.

வாக்குச்சாவடிக்குள் நுழைய இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் பல்வேறு காணொளிகளை சுவார் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் அப்துல்லா அசாம் கான் தெரிவித்துள்ளார்.

மற்றொரு காணோளியில் இஸ்லாமியர்களை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க வேண்டும், யாரையும் தடுக்க கூடாது என்று சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அசீம் ராஸா காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது.

காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்

புகார்கள் அளிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆய்வாளர் ஷரத், “புகார்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு வருகின்றன. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் எந்த பாரபட்சமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

காவல்துறையினர் மீது தவறான குற்றச்சாட்டுடன் யார் காணொளிகளை பகிர்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு தெரியும் என்று கூறிய அவர், காணொளிகளை பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்ற அசாம்பூர் மற்றும் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Source: The Wire

BJPயால இன்னொரு பெரிய அவமானம் | Paguthari | Haseef | Godi Media | Draupadi Murmu | Adani | Modi

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்