Aran Sei

உத்தரபிரதேசத்தில் மர்மான முறையில் கறிக்கடைக்காரர் இறந்ததாகப் புகார் – காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

த்தரபிரதேச மாநிலம் புளந்துஷாஹர் பகுதியில், காவல்துறையின் தேடுதல் வேட்டையின் போது இறைச்சி விற்பனையாளர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு மசூதியின் மின்னணுசாதனங்களை மிரட்டி எடுத்து சென்றதாக புகார் – வழக்குப்பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

கடந்த மே 23 அன்று இரவு, கறிக்கடை நடத்தி வரும் அக்கிள் குரேஷியை காவல்துறை கைது செய்ய வந்தபோது, அவரை மாடியிலிருந்து தூக்கி வீசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், காவல்துறையில் தரப்பில் இதை முற்றிலுமாக மறுத்துள்ளதாகவும், தப்பிக்க முயன்ற போது ஏற்பட்ட காயத்தால் அக்கிள் குரேஷி உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உத்தரபிரதேசம் ஹத்ராஸில் பெண்கள் சித்திரவதைக்கு உள்ளானபோது அமித்ஷா ஏன் பேசாதிருந்தார்’ – மம்தா பானர்ஜி

இதுகுறித்து தெரிவித்துள்ள வட்ட அலுவலர் சுரேஷ் குமார்,” கடந்த மே 23 அன்று 24 பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அக்கிள் குரேஷியைத் தேடி காவல்துறை அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது. அவர் வீட்டில் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்ததால் காவல்துறையினர் திரும்பிவந்துள்ளனர். பின்னர் அக்கிள் குரேஷி சில காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இது கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட காயமாக தெரிகிறது. மாவட்டக்கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான மசூதி – உரிய நடவடிக்க எடுக்க வக்பு வாரியம் அரசிடம் வேண்டுகோள்

இந்த சம்பவம்குறித்து தெரிவித்துள்ள குரேஷியின் மகள்,”நள்ளிரவு 1 மணியளவில் காவல் துறை எங்கள் வீட்டிற்கு வந்து எல்லா பக்கமும் சுற்றி வளைத்தது. என் தந்தையை லத்தியாழும், துப்பாக்கியின் பின்புறத்தாலும் தாக்கியினர், அவரைத் தூக்கி வீசப்போவதாக அவர் அதை செய்தும் முடித்தனர். எங்களையும் அதே போல மிரட்டினர்” என்று கூறியதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்