Aran Sei

உ.பி: வக்பு வாரியச் சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் பாஜக – ஒவைசி குற்றச்சாட்டு

க்பு வாரியச் சொத்துக்களை உத்தரப் பிரதேச அரசு குறிவைத்து அவற்றை அபகரிக்க முயற்சிக்கிறது என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமென் (AIMIM) கட்சியின் தலைவர் ஒவைசி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மதரசாக்கள் மற்றும் மசூதிகளை ஆய்வு மதிப்பீடு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டு அது அமல்படுத்தப்பட்டு வருகிறது, இது பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனை என்பது சிறுபான்மையினருக்கு எதிரான பாஜகவின் பழிவாங்கும் அரசியல் – பேரா. அ.மார்க்ஸ் குற்றச்சாட்டு

இது குறித்து தெரிவித்துள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமென் (AIMIM) கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைஸி கடுமையாக கண்டித்துள்ளார். “நீங்கள் (உத்தர பிரதேச அரசு) வக்ஃப் சொத்துக்களை மட்டும் ஏன் கணக்கெடுக்கிறீர்கள்? இந்து அறநிலைய வாரிய சொத்துக்களுக்கும் இதைச் செய்யுங்கள்.

நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் மதரசாக்களை மட்டும் மதிப்பாய்வு செய்வதில் சதி உள்ளது. சதிதான் இப்போது முன்னிலையில் தெரிகிறது. உத்தரப் பிரதேச பாஜக அரசு அரசியல் சாசன 300ம் பிரிவை மீறுகிறது.

தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்த உயர்நீதிமன்றம்

யாராவது அரசு சொத்தை வக்பு வாரிய சொத்து என்று பதிவு செய்திருந்தால் அதை நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து சந்திக்க வேண்டியதுதானே? தீர்பாயத்திற்குச் செல்ல வேண்டியதுதானே? இது என்ன மதிப்பாய்வு?

கர்நாடகா ஹிஜாப் வழக்கு – தீர்ப்பை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

வக்பு வாரியச் சொத்துக்களை உத்தரப் பிரதேச அரசு குறிவைத்து அவற்றை அபகரிக்க முயற்சிக்கிறது என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமென் (AIMIM) கட்சியின் தலைவர் ஒவைசி தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்