Aran Sei

‘பாஜகவுக்கு வாக்களித்ததாக கங்கை மீது சத்தியம் செய்’ – மின்விளக்கு வசதி கோரியவரிடம் பாஜக எம்.எல்.ஏ கேட்ட உறுதிமொழி

த்தரபிரதேச மாநிலத்தில் ஷாஜஹான்பூர் பகுதியில் வீட்டிற்கு மின்விளக்கு அமைத்துத் தரவேண்டுமென கோரிய நபரிடம், பாஜகவிற்கு வாக்களித்துள்ளாய் என்று சத்தியம் செய்தால் செய்து தருகிறேன் என பாஜகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வீர் விக்ரம் சிங் கேட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷாஜஹான்பூர் பகுதியில் மரம் நடும் விழாவில் பங்கேற்ற அவர்,அப்போது வீட்டில் மின்விளக்கு பொருத்தித்தரச் சொல்ல கேட்ட நபரிடம் இவ்வாறு கூறியுள்ளதாகவும், இந்தக் காணொளி இணையத்தில் பரவி வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூபாவில் நிலவும் தட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவின் தடையே காரணம் – நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக சமூக எழுச்சியை  உண்டாக்க அதிபர் அழைப்பு

அந்தக் காணொளியில், “நீ எனக்கு வாக்களித்தால் , எனக்கு முன் நெஞ்சுயர்த்தி நிற்க உனக்கு உரிமை உண்டு. என்னை நீ ஏமாற்ற முடியாது . எனது தந்தை நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், நானும் சட்டமன்ற உறுப்பினர்” என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர் கங்கை ஆறு அல்லது மகனின் மீது உதவி கேட்டவரை சத்தியம் செய்ய சொல்லியதாகவும் அந்தக் காணொளி வழியாக அறிய முடிவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்படாத பட்டியல், பழங்குடி ஆணையத்தின் பொறுப்புகள் – வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போக செய்கிறதா ஒன்றிய அரசு?

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் யாதவ், “தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ஒரு எம்.எல்.ஏ அனைவருக்கும் பிரதிநிதி. அவருக்கு யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்று எண்ணக்கூடாது. வாக்கு அரசியலில் ஈடுபடுவது, இதுபோன்ற விஷயங்களில் சத்தியம் செய்ய மக்களை கேட்பது ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பொருந்தாது”. என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்