Aran Sei

பசுவை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் – உ.பி. மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்

சுவை பாதுகாப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று உத்தரப் பிரதேச மக்களை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், நேற்று (பிப்பிரவரி 22), அயோத்தி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது, “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உத்தரப் பிரதேசத்தில் மாடுகளுக்கான பாதுகாப்பை இன்னும் அதிகப்படுத்துவோம். மாடுகளின் பாதுகாப்பில் எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மாடுகள் நம்முடைய தாய் என கூறிய பிரதமர்: சாவர்கரின் புத்தகத்தை மேற்கோள்காட்டி திக்விஜய சிங் பதிலடி

மேலும், மாடுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாட்டிற்கு ரூ.900 வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக உத்தரப் பிரதேசத்தில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவுள்ளது என்று அம்மாநில கால்நடை, மீன்வளத் துறை, பால்வளத் துறை அமைச்சர் லக்‌சுமி நாராயண் அறிவித்திருந்தார்.

நவம்பர் 14 அன்று, உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த லக்‌சுமி நாராயண், “மாடுகளின் உயிரைக் காப்பாற்ற உத்தரப் பிரதேசத்தில் மாடுகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு புதுமையான திட்டம் இது, நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது” என்று கூறியிருந்தார்.

‘மாடுகளுக்கு ஆம்புலன்ஸ்; அழைத்த 20 நிமிடங்களில் வரும்’- உ.பி கால்நடை துறை அமைச்சர் அறிவிப்பு

“இந்த சேவையானது எண் 112 அவசரகால சேவையைப் போல் மாடுகளுக்கு பயன் தரும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள். அழைப்பு வந்த அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் அவர்கள் தேவைப்படும் இடத்தில் இருப்பார்கள். இந்தத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதற்காக லக்னோவில் ஒரு கால் சென்ட்டர் தொடங்கப்படுகிறது” என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்