கொரோனா நடைமுறைகளை மீறியதாகக் குற்றம்சாட்டபட்ட 12 தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீதான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவர்களை விடுவித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா விதிகளை மீறியதாக ஒன்பது தாய்லாந்து நாட்டினர், இந்தியாவைச் சேர்ந்த மூவர் மீது காவல்துறை பதிந்த வழக்கின் மீதான விசாரணையின் போது நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மீது ஷாஜஹான்பூர் காவல்துறை தொற்றுநோய் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வெளிநாட்டவர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதன் விசாரணை பரேலி பகுதி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குப்தா, “தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் குற்றமற்றவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.