Aran Sei

சுவரொட்டி ஒட்டினால், சுவர் விளம்பரம் எழுதினால் ஓராண்டு சிறை – உ.பி., அரசின் புதிய சட்டம்

பொது அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் விதமாக, சுவரொட்டி ஒட்டினாலோ அல்லது சுவரில் எழுதினாலோ, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி,  உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள, பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்துதல் தடுப்பு மசோதாவில், இதைத் தெரிவித்திருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, போராட்டங்களின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்திருந்தது.

கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்

”உத்திரபிரதேசம் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்துதல் (தடுப்பு) மசோதா 2021” என்ற பெயரில் இயற்றப்பட்டிருக்கும் மசோதாவிற்கான அவசியமாக, ”சேதப்படுத்துல் என்பது கட்டிடங்களின் அழகு மற்றும் பார்வையை கெடுத்து விடுவதோடு, சுற்றுலா பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் மக்கள் மனதில் மாநிலம் தொடர்பாக ஒரு தவறான எண்ணத்தை பதியவைக்கிறது” என உத்திரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

மேலும், இதுபோன்ற செயல்களை உரிமையாளர்கள், சகித்துக்கொள்ளவோ ​​அல்லது அத்தகைய சிதைவை நீக்கவோ அல்லது சொத்துக்களை தங்கள் சொந்த செலவில் மீண்டும் சீரமைக்கவோ கட்டாயப்படுத்துகின்றனர் என்று உத்திரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர் ஆசாத் – சோசலிச கனவை சிதைத்து விட்ட ஆட்சியாளர்கள்

“அரசியல் ஊர்வலங்கள், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், பணிநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின்போது, பொது மற்றும் தனியார் சொத்துக்களை சிதைப்பது இது போன்ற செயல்களில் ஈடுபடும் மக்களால் செய்யப்படுகிறது… துண்டுப்பிரசூரங்கள் அல்லது  சுவரொட்டிகள் ஒட்டுவது அல்லது சுவரில் எழுதுவது மூலம் பொது சொத்துக்கள் பழுதடைகிறது. வீடுகள், சுவர்கள், வேலிகள் மற்றும் தனியார் சொத்துக்களின் பிற கட்டமைப்புகளும் இத்தகைய நடவடிக்கைகளின்போது பழுதடைகின்றன… பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கவும், நகரங்களின் அழகைப் பேணுவதற்கான நடவடிக்கைகளைச் சரிபார்க்க ஒரு சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது” என அரசாங்கம் அந்த சட்டத்தை இயற்றுவதற்கான காரணமாக கூறியுள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

“ஒரு சொத்தின் உரிமையாளர் அல்லது பயன்படுத்துவரின் பெயரை குறிப்பது அல்லது உள்ளுர் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தவிர்த்துப் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் மீது உரிமையாளர் அனுமதியின்றி மேற்கொள்ளும் எந்த  நடவடிக்கையும் தண்டனைக்குரியது” என இந்தச் சட்டத்தின் கீழ் வரையறை செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘குழந்தைகள் பெறுவது நீங்கள், பள்ளிக் கட்டணத்தை அரசு தரவேண்டுமா’ – பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு

”இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டுவரை சிறை தண்டனை அல்லது, ரூபாய் 5 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விழங்கப்படும்” என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக, பார்க்கப்படுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்