Aran Sei

கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் – உத்தரப் பிரதேச சிறைத்துறை அமைச்சர் அறிவிப்பு

ன அழுத்தத்தைக் குறைக்கவும், கைதிகளின் ஆன்மீக குணத்தை பலப்படுத்தவும் உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள சிறை அதிகாரிகளுக்கு இது தொடர்பான உத்தரவுகளை வழங்கியுள்ள உத்தரப் பிரதேச மாநில  சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி, கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், சிறைக்குள் உள்ள சூழ்நிலையை மேம்படுத்தவும் புனித மந்திரங்கள் உதவும் என்பதால், காலை பிரார்த்தனைக்குப் பிறகு இம்மந்திரங்களை ஒலிக்க விடும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஹலால் இறைச்சி குறித்த பாஜகவின் சர்ச்சை கருத்து – கர்நாடகாவை உ.பி., ஆகுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

“மத நம்பிக்கைகள் கொண்டவர்களின் நாடு இந்தியா . மந்திரங்கள், பிரார்த்தனைகள், ஆன்மீகக் கதைகள் ஓதப்படுவதால், சிறையின் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, புனிதப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன். காலையில் காயத்ரி மந்திரம் அல்லது மஹாமிருத்யுஞ்சய ஜாப் ஒலிக்கவிடும்படி மாநிலம் முழுவதும் உள்ள சிறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இப்பிரார்த்தனைகளால் கைதிகள் பயனடைவார்கள் என அரசாங்கம் நம்புகிறது. தங்களின் தவறை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்” என்று உத்தரப் பிரதேச சிறைத்துறை  அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

நாடாளுமன்றத்தில் சிரிப்பு காட்டிய OPSன் மகன்…

முழுவதும் அறிய க்ளிக் செய்யவும்…

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்