Aran Sei

தமிழகத்தில் தீண்டாமை: மதுரை மாவட்டம் முதலிடம் – ஆர்டிஐ தகவல்

மிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் கடைப்பிடிக்கப்படும் பத்து மாவட்டங்களில் மதுரை முதலிடம் பிடித்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழி தகவல் பெறப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தமிழகத்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படும் கிராமங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கேள்வியெழுப்பியிருந்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்த தமிழக ஆளுநரின் கருத்து: ‘ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல ஆளுநர் செயல்படக் கூடாது’ – வைகோ கண்டனம்

இதற்கு அவருக்கு பதில் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு இறுதிவரை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைப்பிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை 445 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா: ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உயிரிழந்த 2 வயது குழந்தையின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற தந்தை

அதில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டத்தில் 43 இடங்களிலும், அதற்கு அடுத்தப்படியாக விழுப்புரம் மாவட்டத்தில் 25 இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் 24 இடங்களிலும் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிராமத்துடன், சென்னை இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழியே தெரியவந்துள்ளது.

Source: Puthiyathalaimurai

பாஜகங்கிற சாக்கடைல விழுந்தா இப்படி தான் ஆகும் Vanni Arasu Interveiw

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்