Aran Sei

‘பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் வழங்கக்கூடாது’ – ஐ.நா.அவை பாதுகாப்புக் குழு தீர்மானம்

ஆப்கானிஸ்தான் பகுதியில் எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ தாக்கவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ கூடாது என்றுக் கோரி  ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ள 13 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அதே வேளையில் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா மற்றும் சீனா வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளன.

இந்தத் தீர்மானத்தில், ஆப்கான் பகுதியை எந்தக் காரணத்திற்க்காகவும்  எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ  அல்லது பயிற்சி அளிக்கவோ கூடாது என்று கோரியுள்ளது.

தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆட்சியைக் கைப்பற்றினார். அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாக அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

source: இந்து

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்