Aran Sei

இமாலயப்பகுதியில் நீர்மின் திட்டங்கள் மேற்கொள்ளக் கூடாது- மேதா பட்கர் உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரதமருக்குக் கடிதம்

ங்கை-இமாலயப்பகுதியில் ஏழு நீர் மின்சாரத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  60 க்கும் மேற்பட்ட  வல்லுநர்களும், சமூக செயற்பாட்டாளர்களும்  பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் ராமச்சந்திர குஹா, மேதா பட்கர் உள்ளிட்ட 64 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், “உத்தரகண்ட்  மாநிலத்தில்  உள்ள தெஹ்ரி II (1000 மெகாவாட்), தபோவன் விஷ்ணுகத் (520 மெகாவாட்), விஷ்ணுகத் பிபால்கோடி (444 மெகாவாட்), சிங்கோலி பத்வாரி (99 மெகாவாட்), பத்தா பியுங் (76 மெகாவாட்), மத்மஹேஸ்வர் (15 மெகாவாட்), மற்றும் கலிகங்கா II (4.5 மெகாவாட்) ஆகிய நீர்மின் உற்பத்தி திட்டத்திற்கானக் கட்டுமானப்பணிகளை மீண்டும் துவக்க உள்ளதாக அறிவிபை வெளியிட்டுள்ளது” என்று  கூறியுள்ளனர்.   

மேலும்,  “ஆறுகளின் குறுக்கே கட்டப்படும் நீர்மின் நிலையத்தினால் அதிதீவிர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது”.  என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, இந்த நீர்மின் நிலையத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இமய மலையின் சூழல் மற்றும் அதன் உயிர்ச்சூழல் பாதிக்கப்படும். மேலும், தேசத்தின் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்திற்கு அடையாளமாக உள்ள கங்கை ஆறு பாதிக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

Source:The wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்