Aran Sei

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசு – வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 16 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான யூஎப்பியூ அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி) பொதுச் செயலாளர் சஞ்சய் தாஸ் கூறுகையில், “வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு கைவிடாவிட்டால், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தோடு நில்லாமல், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை தவிர்த்து புதிய அணியை அமைக்கிறாரா மம்தா பானர்ஜி? – களைகட்டும் அரசியல் ஆட்டம்

“பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் இந்த நடவடிக்கையானது சுயஉதவி குழுக்களுக்கும், கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் கடன் வழங்குவதை பாதிக்கும். இந்நடவடிக்கையானது  சரியான பொருளாதார தர்க்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல. மாறாக, வங்கிகளை முதலாளிகளின் கைகளில் ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்ட அரசியல் முடிவு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் மொத்த இருப்பு தொகைகளில் 70 விழுக்காடு அளவிலானவை பொதுத்துறை வங்கிகளில்தான் உள்ளது என்றும் அவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது பொதுத்துறை  வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்ட சாமானியர்களின் பணத்தை ஆபத்தில் தள்ளிவிடும் என்றும் சஞ்சய் தாஸ் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத வரை போராட்டம் தொடரும் – சம்யுக்தா கிசான் மோர்ச்சா

2021ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் பேசியிருந்த, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்