Aran Sei

‘உ.பியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினை தீர்க்க வேண்டும்’ – யோகி ஆதித்யநாத்திற்கு ஒன்றிய அமைச்சர் கடிதம்

த்தரபிரதேச மாநிலம் பரேல்லி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது உறவினர்களும் அனுபவித்துவரும் பிரச்சனைகள் குறித்து ஒன்றிய அமைச்சர் சந்தோஷ் கங்வார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உச்சம் தொடும் மாடுகளின் மீதான கரிசனம்: மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், பரேல்லி மாவட்டத்தில், கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் தொலைபேசி அழைப்புகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுக்காததால் நோயாளிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் என்று சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை வீடுகளில் பதுக்கியுள்ளதாகவும் இதன் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால், உத்தரபிரதேச அரசு கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் விற்கப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏக்கள் – யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என விமர்சிக்கும் பாஜக தலைவர்கள்

இதேபோன்ற, அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகங்கள் வேறொரு மருத்துவமனைக்கு இடம்பெயர வற்புறுத்துவதாகவும் சந்தோஷ் கங்வார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உத்தரபிரதேசத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடை களைய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவேண்டுமெனவும், நோயாளிகள் எளிதில் ஆக்சிஜன் பெரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source : The indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்