இறந்த ராணுவ வீரரின் வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக உயிருடன் இருக்கும் ராணுவ வீரரின் வீட்டிற்கு சென்ற ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் நாராயணசாமி, வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிலமும் வழங்குவதாக அறிவித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற விரிவாக்கத்தின்போது புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நாராயணசாமி, பாஜகவின் செயல்திட்டமான மக்கள் ஆசிர்வாதம் யாத்திரையை மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சர் நாராயணசாமியின் பயணத்திட்டத்தின்படி, உயிரிழந்த ராணுவ வீரர் ஒருவரின் வீட்டிற்கு சென்று, ஆறுதல் சொல்வது என திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி ஒரு வருடத்திற்கு முன்பு புனேவில் உயிரிழந்த பசவராஜ் ஹிரேமத் வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக தற்போது ஜம்மு காஷ்மீரில் பணியில் இருக்கும் ரவிக்குமார் கட்டிமணியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கிருந்தவர்களிடம் குடும்பத்தின் உறுப்பினர்கள்குறித்து விசாரித்த அமைச்சர், அவர்களில் ஒருவருக்கு அரசு வேலையும், அரசு நிலமும் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
ரவிக்குமாரின் குடும்பம் குறித்து நன்கு அறிந்த உள்ளூர் பாஜக தொண்டர் ஒருவர், ரவிக்குமாரை காணோளி வாயிலாக அழைத்து அமைச்சருடன் பேசிவைத்தார். இதனை தொடர்ந்து தவறை உணர்ந்த அமைச்சர், அங்கிருந்து கிளம்பி சென்றார்.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.