Aran Sei

மகாராஷ்டிரா முதலமைச்சரை அறைவேன் என்று கூறிய ஒன்றிய அமைச்சர் – கைது செய்த காவல்துறை

காராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அறைவேன்  எனக்கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை ரத்னகிரி காவல்துறை கைது செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  மத்திய அமைச்சர்நாராயண் ரானே,  “நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்ற விவரம் கூட உத்தவ் தாக்கரேவுக்கு தெரியவில்லை. சுதந்திர தின உரையின் போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதல்வர் மறந்துவிட்டார். உரையின் பாதியில், தனது உதவியாளரிடம் அதனை கேட்டு தெரிந்து கொண்டார்.இது அவமானமாக உள்ளது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்”.

இந்நிலையில், மத்திய அமைச்சாரின் மீது மகாத், புனே, நாசிக் ஆகிய காவல்நிலையங்களில் முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நாராயண் ரானே தாக்கல் செய்த  பிணை மனுவையும் ரத்னகிரி பகுதி கிழமை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் அவரை ரத்னகிரி காவல்துறையினர்  கைது செய்து,நாசிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

source: தி இந்து

தொடர்புடைய பதிவுகள்:

தனியாருக்கு விற்கப்படும் பொதுத்துறை சொத்துக்கள் – 6 லட்சம் கோடி சொத்துகளை விற்க ஒன்றிய அரசு முடிவு

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்