Aran Sei

கொரோனா தடுப்பூசி இலவசம் என்பதால்தான் பெட்ரோல், டீசலுக்கு வரி கூடுதலாக விதிக்கப்படுகிறது – ஒன்றிய அரசின் இணையமைச்சர் கருத்து

பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருப்பதற்கு, கொரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு வழங்குவது தான் காரணம் என ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணைஅமைச்சர் ரமேஷ்வர் தெளி தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த செலவிடப்படும் தொகையை திரும்ப பெறுவது குறித்து தெரிவித்த அவர், “பெட்ரோல் விலை அதிகமாக இல்லை, வரி விதித்ததால்தான் விலை அதிகமாக உள்ளது. நீங்கள் அனைவரும் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்கிறீர்கள். அதற்குப் பணம் எங்கிருந்து வரும். நீங்கள் பணம் செலுத்தாதபோது, அதை இப்படித்தான் வசூல் செய்ய முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

‘கான் என்ற பெயருக்காக ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் குறிவைக்கப்பட்டுள்ளார்’ – மக்கள் தேசிய கட்சி தலைவர் மெகபூபா முப்தி

”இமாயலைன் குடிதண்ணீர் பாட்டில்களின் விலை பெட்ரோலின் விலையைவிட அதிகமாக விற்கிறது. அதை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் பாட்டிலின் விலை ரூ. 100க்கு மேல். தண்ணிரின் விலை தான் அதிகமாக உள்ளது பெட்ரோல் டீசலின் விலை அல்ல” என அமைச்சர் கூறியுள்ளார்.

”நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுவதை அரசு பெருமையாக கருத வேண்டும். மாறாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்துவதை நியாயப்படுத்துகிறீர்கள். இது என்ன வகையான லாஜிக்?. அப்படியென்றால் தடுப்பூசிகள் இலவசமாக இல்லை. மக்களிடம் இருந்து அதற்கு மறைமுகமாக வசூல் செய்யப்படுகிறது. தடுப்பூசி யாருக்கும் இலவசமாக செலுத்தப்படுவதில்லை” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் போபிதா ஷர்மா தெரிவித்துள்ளார்.

‘அதிகரித்து வரும் நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க அவசர கால திட்டம் தேவை’ – தமிழ்நாடு அரசிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்

”நீங்கள் கொரோனா தடுப்பூசிக்கு பணம் வசூலித்திருந்தால் கூட பெட்ரோல் டீசல் விலையை விட குறைவாக இருந்திருக்கும்” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்