Aran Sei

இஸ்லாமியர் அல்லாத அகதிகள் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாமென உத்தரவிட்ட ஒன்றிய அரசு – அரசியலமைப்பிற்கு எதிரானது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

credits : the indian express

ஸ்லாமியர் அல்லாத அகதிகள், இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என்ற ஒன்றிய உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

கடந்த மே 28 அன்று, ஒன்றிய உள்விவகாரத்துறை அமைச்சகம் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாத, தற்போது குஜராத்தின் 13 மாவட்டங்களிலும் ,ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளிலிலும் வசிக்ககூடிய இந்து, சீக்கிய, சமண மற்றும் பௌத்த மதத்தைச் சார்ந்த அகதிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, அனீஸ் அஹமது என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவில், அரசின் இந்த முடிவு இஸ்லாமியர்கள் மீதான முற்றிலும் பாகுபாடான நடவடிக்கை என்று கூறியுள்ளதாகவும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர் மீது வழக்கு – போராடுவதற்கு உரிமை உள்ளது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

மேலும்,அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சாசன பிரிவு 14 க்கு எதிரானது என்றும், மதத்தின் அடிப்படையில் பாகுபாட்டோடு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஒன்றிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும் அஹமது தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்குமுன்னர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தாக்கல் செய்துள்ள மனுவில் இதை ஒத்த கருத்தே கூறப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் பூர்வீக இஸ்ஸாமியர்கள் – குடியுரிமை சிக்கலை தவிர்க்க ஜனகோஸ்தியா சம்மனே பரிஷத் முடிவு

மேலும் , அனீஸ் அஹமது தாக்கல் செய்துள்ள மனுவில், ஒன்றிய உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு, “அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட, பாரபட்சமான நடவடிக்கை” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்