நீட் முதுகலை படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
2021-22ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை மீண்டும் தொடங்க, ஜனவரி 7ஆம் தேதி தனது இடைக்கால உத்தரவில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவ்வுத்தரவானது 27 விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு (ஓபிசி) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான (இடபிள்யூஎஸ்) 10 விழுக்காடு ஒதுக்கீட்டை உறுதி செய்தது.
இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும் – உச்சநீதிமன்றம்
இந்நிலையில், இன்று(ஜனவரி 9), ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதியளித்தபடி, 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் முதல் மருத்துவ ஆலோசனைக் குழுவால் நீட் முதுகலை கலந்தாய்வு தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
रेसीडेंट डॉक्टरस को स्वास्थ्य मंत्रालय द्वारा दिए आश्वासन अनुसार, माननीय सर्वोच्च न्यायालय के आदेश के बाद MCC द्वारा NEET-PG काउन्सलिंग 12 जनवरी 2022 से शुरू की जा रही है।
इससे कोरोना से लड़ाई में देश को और मज़बूती मिलेगी। सभी उम्मीदवारों को मेरी शुभकामनाएं।
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 9, 2022
மேலும், “கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இது நம் நாட்டிற்கு கூடுதல் பலத்தை அளிக்கும். அனைத்து மாணவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்” என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
கடந்தாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களென இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 11அன்று நீட் முதுகலை படிப்பிற்கான தேர்வு நடத்தப்பட்டது.
அத்தேர்வின் முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தோராயமாக 45,000 முதுகலை இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கப்படுவதற்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த மாதம், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் கலந்தாய்வை விரைவில் நடத்தக் கோரி, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை ஈடுபட்டனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.