Aran Sei

‘எங்கள் எதிர்ப்பையும் மீறி புகைப்படம் எடுத்தார் ஒன்றிய சுகாதார அமைச்சர்’ – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மகள் குற்றச்சாட்டு

டல்நலம் குன்றியிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்தார். அச்சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்மோகன் குடும்பத்தினர் வருத்தமடைந்தார்.

மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் கூறும்போது,” எனது தந்தையின் அறைக்கு அமைச்சர் வருகை தந்தபோது புகைப்படக்காரர் உடன் வருவதற்கு எனது தாயார் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் அவரது ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மீண்டும் அமலானது ‘ரிமைன் இன் மெக்சிக்கோ’ – நீதிமன்றத்தின் ஆணைக்கு இணங்கினார் அதிபர் ஜோ பைடன்

மேலும், “என் தந்தை எய்ம்ஸில் டெங்குவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் பார்வையாளர்களை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். சுகாதார அமைச்சர் வருகை தந்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த நேரத்தில் எனது பெற்றோர் புகைப்படம் எடுக்க முடியாத நிலையில் இருந்தனர், ”என்று மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங்  கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு, ஒன்றிய சுகாதாரஅமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில்  மருத்துவமனை அறைக்குச் சென்ற சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாக குற்றச்சாட்டில் ஒருவர் படுகொலை – காவல்துறை விசாரணை

பின்னர், ட்விட்டரில் இருந்து புகைப்படங்களை அகற்றினார். ஆனால் இந்த விவகாரம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையோ சுகாதார அமைச்சகமோ எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்