Aran Sei

தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என கூறிய சுகாதார அமைச்சரை காணவில்லை – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

credits : dna india

’தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என நாள்தோறும் கிடையாது எனக் கூறி வந்த ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனை காணவில்லை என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “தமிழ்நாட்டி 34 மாவட்டங்களில், கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணி ஜூன் 2 ஆம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ”ஒன்றிய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கையே இந்த பற்றாக்குறைக்கு காரணம். ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?” எனத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்