கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதுற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து, அரசு தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டைப் பெறுவதிலேயே மனச்சிதைவு நோய் (Schizophrenia) மனநிலை கொண்டுள்ளதாக நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
மேலும், நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தித்திறன் ஆகிய காரணங்களினால் மட்டுமே இந்தியா கொரோனா தொற்றை எதிர்த்து வருவதாகவும் அவர், ராஷ்டிர சேவா தள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள அமர்த்தியா சென்,”இந்தியா கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதை விடுத்து, அது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான பாராட்டை பெறுவதிலேயே கவனம் செலுத்தியது. இதற்க்கு காரணம் அரசு கொண்டிருந்த மனச்சிதைவு நோய் (Schizophrenia) ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது,”பொருளாதாரத்தின் தோல்வி மற்றும் சமூக ஒத்திசைவின் தோல்வி ஆகிய தோல்விகள் தொற்றுநோய் தோல்விக்கான அடிப்படையாகும்,” என்றும் அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்
இந்நிலையில், சமூகம் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் பெரும் கட்டமைப்பு மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும், அதுமட்டுமல்லாது சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளில் மாறுதல் செய்யப்பட வேண்டுமெனவும் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
SOURCE; PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.