Aran Sei

தேர்தல் முடிந்ததால் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் – ஒன்றிய அரசு தகவல்

த்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருத்து சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அச்சிடும் வழக்கத்தை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

ஜனவரி 8ஆம் தேதி, உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில்,தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதற்கு அளிக்கப்படும் சான்றிதழ்களில் இருந்து பிரதமரின் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது.

மார்ச் 8ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

உயிரோடு இல்லாதவர்களுக்குக் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழ் – ஒன்றிய அரசு தரும் வினோத விளக்கம்

இந்நிலையில், இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அச்சிடுவதை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விரும்புவதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்த ஐந்து மாநிலங்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பு மருத்து சான்றிதழ்களில் பிரதமரின் புகைப்படத்தை மீண்டும் இணைக்க கோவின் இணையதளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்” என்று பிடிஐயிடம்  அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்