Aran Sei

குஜராத்தில் அமலாக்க நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய நிதி – 350 விழுகாடு உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல்

குஜராத்தில் உள்ள அமலாக்க நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நேரடியாக நிதி வழங்கியது 2015 ஆம் ஆண்டு முதல் 350 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31, 2020 ஆம் தேதி நிறைவடந்த நிதியாண்டிற்கான  சிஏஜியின் மாநில நிதி தணிக்கை அறிக்கை செப்டம்பர் 29 ஆம் தேதி குஜராத் சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது.

கேரளாவில் பாடமாகும் பெரியாரின் கருத்துக்கள் – திராவிட தேசியம் என்ற பாடத்தில் சேர்த்த கண்ணூர் பல்கலைக்கழகம்

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான மாற்றப்பட்ட தொகை மாநில அரசின் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் பிரதிபலிக்கவில்லை. இது, நிதியுதவி திட்டங்கள் மற்றும் கூடுதல் உதவிக்கான ஒன்றிய அரசின் அனைத்து உதவிகளும் மாநில அரசுகள் வழியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவுக்கு எதிராக உள்ளது.

”ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட நிதிகள் எதுவும் மாநில அரசின் வரவு செலவு வழியாக வழங்கப்படவில்லை. இதனால் இந்த திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவுகள் மற்றும் இதர விவரங்கள் முழுமையாக இல்லை” என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம்’ – அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்

குஜராத்தின் அமலாக்க நிறுவனங்களுக்கு 2019-20 ஆம் ஆண்டுவரை நேரடியாக நிதி வழங்கப்பட்டதை ஆராய்ந்ததில் இருந்து, இந்த தொகை 350 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 2015 – 16 ஆம் நிதியாண்டில் ரூ. 2,542 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019 – 20 ஆம் நிதியாண்டில் ரூ. 11, 659 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

2019 – 20 நிதியாண்டில், தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 837 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 17 கோடி மற்றும் அறக்கட்டளைக்கு ரு. 79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகளுக்கு ரூ. 18.35 கோடி மற்றும் சில தனி நபர்களுக்கு ரூ 1.56 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்