Aran Sei

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக 22 யூடியூப் சேனல்கள் முடக்கம் – ஒன்றிய அரசு நடவடிக்கை

தேசிய பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான உறவுகள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்திற்காக தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.

தகவல் தொழிற்நுட்ப விதிகள், 2021 இன் கீழ் பதினெட்டு இந்திய யூடியூப் செய்தி சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது. இந்நடவடிக்கையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு யூடியூப் செய்தி சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கிற்கு எதிராக மக்கள் போராட்டம்: காணொளி வெளியிட்ட சேனலை முடக்கியது யூடியூப்

“இந்திய ஆயுதப் படைகள், ஜம்மு காஷ்மீர் போன்ற பல்வேறு விவகாரங்களில் போலியான செய்திகளை பல யூட்யூப் சேனல்கள் வெளியிட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இந்த யூட்யூப் சேனல்களின் உள்ளடக்கத்தில், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் பல சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து வெளியிடப்பட்ட இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கங்களும் அடங்கும்” என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த சேனல்களால் வெளியிடப்பட்ட பெரும்பாலான தவறான உள்ளடக்கங்கள், உக்ரைனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையதாகவும் பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை ஆபத்தில் தள்ளும் நோக்கத்திலும் உள்ளது” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: NDTV

“ராமராஜ்ஜியத்தின் லட்சணத்தை நான் சொல்கிறேன்…”   Dr Kantharaj Interview..

கூடுதல் தகவல்களுக்கு க்ளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=hFH8VvBTDdc

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்