மலையாள மொழி செய்தித் தொலைக்காட்சியான மீடியா ஒன்னின் ஒளிபரப்பை, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது.
இன்று(ஜனவரி 31) நண்பகல் தொலைக்காட்சி ஒளிபரப்பானது.
இது தொடர்பாக, மீடியாஒன் தொலைக்காட்சியின் ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பிற்கு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், இது குறித்த விவரங்களை தொலைக்காட்சி இன்னும் பெறவில்லை. இந்த தடை குறித்த விவரங்களை மீடியாஒன் டிவிக்கு ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
“இந்த தடைக்கு எதிராக எங்களின் சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். அச்செயல்பாடுகள் முடிந்த பிறகு, தொலைக்காட்சி தனது ஒளிப்பரப்பை தொடரும். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையில் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்” என்று தனது அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
`அரசு, டிஜிட்டல் மீடியாவை மட்டும் கட்டுப்படுத்தவில்லை’ – ஊடகவியலாளர் அபிநந்தன்
தொலைக்காட்சியின் உரிமம் காலாவதியாகவில்லை என்றும் தடை விதிக்கப்பட்டபோது தொலைக்காட்சிக்கான உரிமத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும் மீடியாஒன் தொலைக்காட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைய ஆண்டுகளில் மீடியாஒன் தொலைக்காட்சியின் ஒலிபரப்பிற்கு தடைவிதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடும்போது, கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் (ஒழுங்குமுறை) சட்டம், 1998 இன் விதிகளை மீறிய கூறி, மீடியாஒன் தொலைக்காட்சிக்கு 48 மணிநேரம் ஒன்றிய அரசு தடை விதித்தது.
Source: Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.