ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு இது அநீதிக்கு எதிராக போராடியவர்களின் வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்நாட்டின் விவசாயிகள் தங்களின் சத்தியாகிரகத்தின் வழியாக ஒன்றிய அரசை பணிய வைத்துள்ளார்கள்.இது அநீதிக்கு எதிராக போராடியவர்களின் வெற்றி , ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.
देश के अन्नदाता ने सत्याग्रह से अहंकार का सर झुका दिया।
अन्याय के खिलाफ़ ये जीत मुबारक हो!जय हिंद, जय हिंद का किसान!#FarmersProtest https://t.co/enrWm6f3Sq
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2021
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக எதிர்ப்பால் சாதிக்க முடியாததை, வரும் தேர்தலுக்கு பயந்து சாதிக்கலாம். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்தது கொள்கை மாற்றத்தினாலோ அல்லது மனமாற்றத்தினாலோ ஏற்பட்டதல்ல தேர்தல் பயத்தால் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.