ஆங்கிலேயருக்கு எதிரான மாப்ளாக்களின் போராட்ட வரலாற்றை ஒன்றிய அரசு திரிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் எஸ். அப்துல்லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கு அறிக்கையில், “கேரளாவில் நடைபெற்ற மாப்ளாக்களின் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரட்டங்கள் ஆங்கிலேயர்களை நிலைகுலைய செய்தது. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான மாப்பளாக்களை சரக்கு ரெயிலில் ஏற்றி அனுப்பினர். இவர்களில் பலர் மூச்சு திணறி மரணித்தனர். மரணித்தவர்களின் சடலங்கள் கோவை மாவட்டம் போத்தனூர் மற்றும் திருச்சி காஜாமலையிலுள்ள அடக்கத்தளங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டம்
இந்திய சுதந்திர போரட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது” என்று கூறியுள்ளார்.
போராட்டம் நடந்து நூறாண்டு கடந்த நிலையில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த கேரளா மாப்ளாக்கள் 387 நபர்களின் பெயரை சுதந்திர போராட்ட வீரர்களின் அகராதியிலிருந்து நீக்க ஒன்றிய அரசுமுடிவு செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகறிந்த வரலாற்றை திரித்துப் பொய்யுரைக்கும் ஒன்றிய அரசின் செயலை வரலாற்றை அறிந்த வரலாற்றாசிரியர்கள் ஒன்றினைந்து எதிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
திட்டமிட்டு மறைக்கப்படும் இஸ்லாமியர்களின் வரலாற்றையும் , வரலாற்றை திரித்து மக்களிடம் வெறுப்பை உமிழும் ஃபாசிசவாதிகளின் சூழ்ச்சியையும் முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைத்து முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் எஸ். அப்துல்லாஹ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.