Aran Sei

‘2018-2020 இல் 1,807 வகுப்புவாத கலவர வழக்குகள் பதிவு; 8,565 பேர் கைது’ -ஒன்றிய அரசு தகவல்

ந்தியாவில் 2018-2020ஆம் ஆண்டில் மொத்தமாக 1,807 வகுப்புவாத கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாக 8,565 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

2018 இல் 512 வகுப்புவாத கலவர வழக்குகளும், 2019 இல் 438 வழக்குகளும், 2020 இல் 857 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், பீகாரில் அதிக அளவிலான வகுப்புவாத கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அதற்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா உள்ளது என்றும் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

“இந்த வகுப்புவாத கலவர வழக்குகளில் 2018 இல் 4,097 பேரும், 2019 இல் 2,405 பேரும், 2020 இல் 2,063 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்குகளில் 2018 இல் 4,169 பேர், 2019 இல் 2,281 பேர் மற்றும் 2020 இல் 1,908 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கலவர வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் 2018 இல் 200 பேரும், 2019 இல் 332 பேரும், 2020 இல் 229 பேரும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

முசாபர் நகர் கலவரம் – 8 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாத நீதி

பீகாரில் 2018-2020 ஆண்டுகளில் பதிவான 419 கலவர வழக்குகளில் 2,777 பேர் கைது செய்யப்பட்டு, 2,316 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களில் 62 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 2018-2020 ஆண்டுகளில் பதிவான 167 கலவர வழக்குகளில் 1,332 பேர் கைது செய்யப்பட்டு, 1,324 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களில் 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானாவில் 2018-2020 ஆண்டுகளில் பதிவான 146 கலவர வழக்குகளில் 294 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரின் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களில் 3 பேர் மட்டும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்