Aran Sei

உலக பட்டினிக் குறியீட்டு எண் பட்டியலில் 94 வது இடத்தில் இந்தியா – பதுக்கல்காரர்கள் போல செயல்படும் ஒன்றிய அரசே காரணம் என குற்றச்சாட்டு

லக பட்டினிக் குறியீட்டு எண் பட்டியலில் இந்தியா 94வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு, உணவு தானியங்களை பதுக்கும் பதுக்கல்காரர்கள் போல செயல்படும் ஒன்றிய அரசின் செயல்பாடே காரணம் என  உணவு உரிமை பிரச்சார இயக்கத்தின் பொருளாதார வல்லுநர் தீபா சின்ஹா குற்றம்சாட்டியிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 117 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா பின்னடவை சந்தித்திருக்கும் நிலையில், இந்தியாவி அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 64,73,75,88 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

பொது விநியோக திட்டத்தில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 78 ஆயிரம் டன் அரிசியை, தனியார் ஆலையில் எத்தனால் தயாரிப்பதற்கு மலிவு விலையில் ஒன்றிய அரசு வழங்கியுள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

‘ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் பாஜக’ – வாக்காளர்களை கடத்துவதாக உ.பி பாஜக மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக, பெட்ரோலுடன் கலப்பதற்காக பயன்படுத்தபடும் எத்தனால் தயாரிப்பில் இந்த ஆலைகள் ஈடுபட்டுள்ளன.

இந்த ஆலைகளுக்கு மலிவு விலையில் அரிசி வழங்குவதோடு மட்டுமல்லாமல், எத்தனால் உற்பத்திய விரிவுபடுத்துவதற்காக குறைந்த வட்டியிலான கடன்கள் மற்றும் மானியங்களும் அரசு வழங்குகிறது என தி வயர் குறிப்பிட்டுள்ளது.

”கொரோனா பெருந்தொற்று காரணமாக வறுமையில் சிக்கி உள்ள பல குடும்பங்கள் ரேஷன் அரசியை நம்பி நிலை அதிகரித்துள்ளது. இதற்காக பொது விநியோக திட்டத்திற்கு கூடுதல் அரிசி தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்காக மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் அரிசி குவிண்டால் ஒன்றிற்கு ரூ 2,200 என விலை நிர்ணயித்துள்ள ஒன்றிய அரசு. இதே அரிசியின் விலையைத் தனியார் ஆலைகளுக்குக் குவிண்டலுக்கு ரூ. 2,000க்கு வழங்குகிறது” என தி வயர் குற்றம்சாட்டியுள்ளது.

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மாட்டு வண்டி பயணம் சென்ற வாஜ்பாய் – பழைய காணொளியை பகிரும் எதிர்கட்சியினர்

இது தொடர்பாக தி வயர் இணையதளத்திடம் பேசிய உணவு உரிமை பிரச்சார இயக்கத்தின் பொருளாதார வல்லுநர் தீபா சின்ஹா, “கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. மாநில அரசுகளுக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவர்களில் பல பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பலன்கள் பெற தகுதியற்றவர்கள் ஆகின்றனர். இந்த நேரத்தில் உணவு தானியங்கள் விநியோகத்தை அரசு அதிகரிக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு தேவைப்படுவோருக்கு அரிசியை வழங்காமல், ஒரு பதுக்கல்காரரை போல செயல்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநகரத்தால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, 1991 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு குடிமகனுக்கு 80.9 கிலோ அரிசி கிடைக்கும் வீதம் என்று இருந்த நிலையில், இது 2019 ஆண்டு 70.1 கிலோவாக குறைந்துள்ளது என தி வயர் தெரிவித்துள்ளது.

இதேப் போன்று, 1991 ஆம் ஆண்டில் ஒரு இந்தியருக்கு ஆண்டொன்றுக்கும் கிடைத்த மொத்த உணவு தானியங்களின் அளவு 186.2 கிலோவாக இருந்தது, 2019 ஆம் ஆண்டில் 180.5 கிலோவாக வீழ்ச்சியடைந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்