Aran Sei

விவசாயத்திற்கு தடையில்லா மும்முனை மின்சாரம் – எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம்

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று உடுமலைப்பேட்டை தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாகத் திருப்பூர்  வந்துள்ள அவர், உடுமலை பேருந்து நிலையத்திற்கு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதில்,  விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறன. குறிப்பாக விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் மக்களிடமிருந்து வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து பின்னர் நீக்கம் – பிரதமர் மோடியை விமர்சித்ததாக உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கை

திமுக தலைவர் ஸ்டாலினோ அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை, மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லையெனப் பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றும்  திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி எம்.பி. திருப்பூர் மாவட்டத்திலேயே சுற்றுப்பயணம் செய்து பொய் பிராச்சாரம் செய்து வருவதாகவும் அ.தி.மு.க. ஆட்சியில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லையெனத் தவறான தகவலைப் பரப்பி வருவதாகவும்  எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

சிங்காரவேலர்: தொழிலாளர் வர்க்க மாவீரன் – பேரறிஞர் அண்ணா

நாங்கள் சொன்னதால் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1100 எண் குறை தீர்க்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கனிமொழி கூறி இருக்கிறார். ஆனால் 2 மாத காலத்துக்கு முன்பாகவே அதிகாரிகள் குழு செயல்பட்டு இந்தத் திட்டத்தை வெற்றி பெறச்செய்துள்ளது. இன்னும் 10 நாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அந்தத் திட்டத்தின் படி வீட்டில் இருந்தே பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனையா, தெருவிளக்கு எரியவில்லையா, பட்டா கிடைக்கவில்லையா? என 1100 எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் உடனடியாகப் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்றும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார்.

’கொரோனா தடுப்பூசி நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ – அமித் ஷா

விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110 கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்