Aran Sei

பாலின பேதத்தை ஒழிக்க மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் ஒரே சீருடை – கேரள பள்ளியின் புதிய முயற்சி

கேரள அரசு பாலின பேதத்தி ஒழிக்க ஒரே மாதிரியான உடையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக எர்ணாக்குளம் மாவட்டத்திலுள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்த வலையஞ்சிரங்கரா அரசு தொடக்கப்பள்ளியொன்றில் மாணவ – மாணவியருக்கு பாலின பேதமின்றி ஒரே மாதிரியான ஆடை வழங்கப்பட்டிருக்கிறது.

754 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவியர்கள் அனைவருமே, மேல் சட்டையும் – முக்கால் பேண்ட்டும் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆடை அறிவுறுத்தல்கள்  நீக்கப்பட்டிருக்கிறது. பேண்ட் – சட்டை என மாணவர்களின் ஆடையை போலவே மாணவிகளின் ஆடையும் அமைந்திருப்பதன் மூலம், மாணவிகள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி, சுதந்திரமாக நடக்கலாம்; அமரலாம்; ஓடி ஆடி விளையாடலாம் என பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது.

ஏர்டெல்லை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் – அரசு பல ஆயிரம் கோடி சலுகை வழங்கியும் விலை உயர்வு

இந்த வழக்கம் 2018ம் ஆண்டே அப்பள்ளியில் அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் இது ஊடக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 2018-ல் இத்திட்டத்தை அங்கு அறிமுகப்படுத்தியிருந்த அன்றைய பள்ளி முதல்வர் ராஜி இதுகுறித்து தற்போது பேசியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில், “எங்கள் பள்ளியில் பாலின சமத்துவம் குறித்து பேசுகையில், பல விஷயங்கள் பள்ளிக்குள்ளேயே செயல்படுத்தப்பட வேண்டியதாக இருப்பது எங்களுக்கு புரிந்தது. குறிப்பாக மாணவ மாணவியர் மத்தியிலான ஆடைக்கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள். அதுகுறித்து நிறைய யோசிக்கையில், அக்கட்டுப்பாடு மற்றும் அறிவுரைகளால், பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை நாங்கள் உணர்ந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்க்ர்ட் அணிகையில் பெண் குழந்தைகள் கூடுதல் சிரமத்துக்கும், சிக்கலுக்கும் உள்ளாகின்றனர். அவர்கள் சற்றே சுதந்திரமின்றி, ஆடை விலகிவிடுமோ என்ற ஐயத்துடனும் எண்ணத்துடனும் கவனத்துடனேயே இருப்பதை அறிந்தோம். ஆகவே அந்த நடைமுறையை மாற்ற முடிவு செய்து, குழந்தைகளின் பெற்றோருடன் கலந்துரையாடினோம். 90% பெற்றோர், எங்களுக்கு ஆதரவு தெரிவித்து, எங்கள் முடிவை வரவேற்றனர். இப்போது இது வெளியுலகத்துக்கு தெரியவந்து, பேசுபொருளாக மாறியிருப்பது, எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. பாலின வகுப்பெடுக்கும் பள்ளிகள் அனைத்தும் இதுகுறித்து யோசிக்க வேண்டுமென்பது, என் விருப்பம்” எனக் கூறியுள்ளார்.

‘அரசு நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தினால்தான், கஞ்சா பயிரிடுதலை நிறுத்துவோம்’- ஒடிசா கிராமவாசிகள் போராட்டம்

பள்ளியின் தற்போதைய முதல்வர் சுமா கூறுகையில், “இந்தப் பாலின சமத்துவ சீருடை கலாசாரத்தால் எங்கள் பள்ளி குழந்தைகள் அனைவரும், மனதளவில் பேதங்களை தவிர்த்து பழகுகின்றனர். மாணவியர் எவ்வித முன்யோசனையுமின்றி சுதந்திரமாக நடக்கவும், ஓடி ஆடி விளையாடவும் முடிகிறது. மாணவர்களும் மாணவிகளும் சம அளவில் சுதந்திரம் தரப்பட்டு வளர்க்கப்படவேண்டுமென்பதே எங்கள் நோக்கம்” என என்று. தெரிவித்துள்ளார்.

திரைக்கலைஞர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து பழங்குடிகள் போராட்டம் – காவல்துறை வழக்கு பதிவு

கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறும்போது, இம்மாதிரியான முயற்சிகளை எங்கள் அரசு தொடரும் என்று கூறியுள்ளார்.

Source: timesofindia

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்