Aran Sei

நிச்சயமற்ற எதிர்காலமே பிரச்சினை : கொரோனா குறித்து ஹருகி முராகாமி

ரசியல்வாதிகள் கொரோனா வைரஸை பற்றி வெளிப்படையாக பேசி, மக்களின் நிச்சயமின்மையையும், அச்சத்தையும் போக்க வேண்டும் என ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகாமி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31 ஆம் தேதி , இரு மணி நேர ரேடியோ நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முராகாமி, அரசியல் தலைவர்கள் “ மனதின் ஆழத்தில் இருந்து உண்மையை பேச வேண்டும்” என்று கூறினார். அப்படி நேர்மையாக பேசுவது,  கட்டுப்பாட்டை மீறி  சென்று கொண்டிருக்கும் நோய்தொற்றை கட்டுப்படுத்த மக்களை உத்வேகப்படுத்துவதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கொரானா தடுப்பு மருத்து பரிசோதனை : பிரேசிலில் ‘தன்னார்வலர்’ மரணம்

ஜப்பானில், கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நோய்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 949 ஆக இருந்தது, வியாழன் அன்று 1,337 ஆக உயர்ந்ததாக செய்தி வெளியான சில மணி நேரங்களில் முராகாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒளிப்படங்கள் சொல்லும் வரலாறு : டெல்லியை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு

“நிச்சயமற்ற நம்முடைய எதிர்காலம்தான் கொரோனா வைரஸின் பெரிய பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். அது தான் மக்கள் மத்தியில் அச்சத்தையும், தப்பியோடும் போக்கையும் தூண்டுகிறது.  அந்த உணர்வுகள்தான் அபாயகரமானவை” என்று முராகாமி ரேடியோ நிகழ்ச்சியில் கூறினார்.

( தி டெலிகிராஃப் பக்கத்தில் வெளியான செய்தியின் சுருக்கம்) 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்