Aran Sei

பழங்குடியினரை இழிவுபடுத்தி பாடம் நடத்திய கல்வியாளர் – எதிர்ப்பை அடுத்து காணொளியை நீக்கிய கல்வி இணையதளம்

ழங்குடி மக்களை இழிவுபடுத்தும் வகையில் ‘அன்அகாடமி’ கல்வி தளத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு அந்நிறுவனம் நிபந்தனையற்று மன்னிப்பு கோரியுள்ளது.

டாடா கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஹெங்கம் ரிபா என்ற மாணவர் இதுகுறித்தக் காணொளியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு கருத்து தெரிவித்த கல்வியாளருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்தக் காணொளியை அன்அகாடமி அத்தளத்தில் நீக்கியுள்ளது.

பாஜக விவசாயிகளை திசை திருப்புகிறது – ராகேஷ் திகைத் குற்றச்சாட்டு

அந்தக் காணொளியில் குடிமைப் பணி தேர்வுக்கான பாடம் எடுத்துக் கொண்டிருந்த கல்வியாளர் சித்தார்த் சிங், “பழங்குடி மக்கள் முட்டாள்கள். அவர்களிடம் நிலங்கள் குறித்த சட்டப்பூர்வ ஆவணங்கள் கூட கிடையாது” என்று தெரிவித்திருந்தார்.

வடகிழக்கு இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ‘ஜும்’ சாகுபடி குறித்த பாடத்தின் போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

தீலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்று கைதான நாடாளுமன்ற உறுப்பினர் – காவல் பிணையில் விடுவிப்பு

இந்நிலையில், சித்தார்த் சிங் கூறிய இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அன்அகாடமி கல்வி தளத்தில் இருந்து அந்தக் காணொளியை நீக்கியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் சோட்டுபாய் வாசவா, “பழங்குடி மக்களை இழிவு படுத்தும் கருத்துக்கு அந்நிறுவனம் நிபந்தனையின்றி மன்னிப்புக் கோர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

SOURCE: The indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்