Aran Sei

போர்நிறுத்தத்தை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா சபையின் பாதுகாப்புக்குழு வேண்டுகோள்

க்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக்குழு இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த நடவடிக்கைகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டுமென நேற்றைய தினம் கூறியுள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வன்முறை சம்பவத்தால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், பாலஸ்தீன மக்கள் குறிப்பாக காசா பகுதியில் வாழும் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் அவசர உதவிகளைப் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எகிப்தின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் -11 நாட்களாக நடந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி- பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

கடந்த மே 10 அன்றிலிருந்து 11 நாட்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாப் பகுதியைச் சார்ந்த 248 பேர் கொல்லப்பட்டனர். அதில் 66 குழந்தைகளும் அடங்குவர்.அந்த தாக்குதல்களால் 1900 பேர் காயமடைந்ததாகவும் அல்-ஜசீரா தெரிவிக்கிறது.

இதே போன்று, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததாக அந்த செய்தி கூறுகிறது.

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

மேலும், “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு ஜனநாயக நாடுகள் பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன் அமைதியாக வாழ்வதின் அடிப்படையில் நீடித்த சமாதானத்தை அடைவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக்குழு கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்