Aran Sei

ஊடகவியலாளர் மீனா கோட்வால் உயிருக்கு ஆபத்துள்ளது, அவருக்கு பாதுகாப்பு வழங்குக: ஒன்றிய அரசுக்கு ஐ.நா மனித உரிமை ஆர்வலர்கள் கடிதம்

Credit: The Wire

டகவியலாளர் மீனா கோட்வால் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாயத்து: இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை ஜிகாதி என கூறியதோடு, 7 பத்திரிக்கையாளர்களை தாக்கிய வலதுசாரியினர்

பிப்ரவரி 3 தேதி கடிதம் அனுப்பப்பட்டு, 60 நாட்களாகியும் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால், தற்போது அந்த கடிதம் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா சபையின் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த கடிதத்தில், மனித உரிமை பாதுகாவலர்களின் நிலைமை குறித்து ஐ.நா சிறப்புப் பிரதிநிதி மேரு லாலர், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான சிறப்புப் பிரதிநிதி டேவிட் கேய், சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான சிறப்புப் பிரதிநிதி பெர்னார்ட் டி வரேன்னஸ், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடு குறித்த பணிக்குழு தலைவர் மெலிசா உப்பட்டி, துணைத் தலைவர் எஸ்டராடா-டா, உறுப்பினர்கள் எலிசபெத் ப்ரோடெரிக், இவனா ராடாசிக் மற்றும் மெஸ்கெரெம் கெசெட் டெக்னே ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்ற இஸ்லாமிய வியாபாரியை தாக்கிய வழக்கு: பஜ்ரங் தள் உறுப்பினர்கள் 5 பேர் கைது

தலித்துகள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக வாதிடும் ஆன்லைன் இணையதளமான மூக்நாயக்க்கின் நிறுவனராக மீனா கோட்வால் உள்ளார்.

டிசம்பர் 25, 2021 தேதி மனுஸ்மிருதி தகன் திவாஸ் (மனுஸ்மிருதி எரியும் நாள்) தினத்தை நினைவுபடுத்தும் விதமாக இணையதளத்தில் காணொளி ஒன்றை மீனா கோட்வால் வெளியிட்டார்.

அந்த காணொளி வெளியான அடுத்த தினம் பஜ்ரங் தள, கர்னி சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் தொலைப்பேசி வாயிலாக மீனா கோட்வாலுக்கு மிரட்டல் விடுத்துள்ளன.

இஸ்லாமியர்களின் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது – வி.எச்.பி, பஜ்ரங் தள் மிரட்டல்

ஒரு தொலைப்பேசி உரையாடலில் தன்னை காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், சாதிய ரீதியாக அவதூறு செய்தார் என்று மீனா குற்றம் சாட்டியுள்ளார்.

டிசம்பர் 30 தேதி, டெல்லி அம்பேத்கர் நகர் காவல்நிலையத்தில் மிரட்டல்கள் தொடர்பாக மீனா கோட்வால் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை இது தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை. மேலும், முதல் தகவல் அறிக்கை கூட பதிவு காவல்துறையினர் செய்யவில்லை.

கட்டாயமதமாற்றம் எனக்கூறி பஜ்ரங்தளம் போராட்டம் – ரயில்பயணத்தில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள்

“புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாத காவல்துறையினரின் பொறுப்பற்ற தன்மையினால், மீனா கோட்வால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கோட்வாலின் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு அம்பேத்கர் நகர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு அழுத்தம் தருமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று மனித உரிமை ஆர்வலர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Source: The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்