காஷ்மீரை சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை தடுப்பு காவல் அடைத்தது மற்றும் காஷ்மீர் டைம்ஸ் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டது தொடர்பான சட்டப்பூர்வ காரணங்களை விளக்குமாறு ஐநா மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்தியாவின் கடமைகளுக்கு இணங்குகின்றனவா என்பது தொடர்பான விவரங்களையும் வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
கருத்து உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது மற்றும் ஊக்குவிப்பதற்காக ஐநா மனித உரிமை கவுன்சிலால் நியமிக்கப்பட்ட சிறப்பு செயல்பாட்டாளர் ஐரீன் கான் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான செயற்குழுவின் துணைத் தலைவர் எலினா ஸ்ரைனெட்டே ஆகியோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
சம்பவங்கள்குறித்து விளக்கம் கோரி ஜூன் 3 ஆம் தேதி எழுதப்பட்டிருந்த கடிதத்தில் வழங்கப்பட்டிருந்த 60 நாட்கள் காலக்கெடு முடிவடைந்துவிட்டதாக இந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளனர்.
ஃபஹத் ஷா, அவுகிப் ஜவீத், சஜார் குல், காஜி ஷிப்ளி ஆகிய நான்கு ஊடகவியலாளர்கள்குறித்து கவலை தெரிவித்துள்ள செயல்பாட்டாளர்கள், “எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் துல்லியத்தை முன்கூட்டியே தீர்மானிக்க விரும்பவில்லை என்றாலும், ஜம்மு காஷ்மீரின் நிலவரம் குறித்தும், அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள்மீது தன்னிச்சையாக தினிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட தடுப்புகாவல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள்குறித்து நாங்கள் தீவிர கவலை அடைகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் டைம்ஸ் ஊடகத்தின் அலுவலகத்தை மூட உத்தரவிட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்கள், ”எந்தவொரு சமூகத்திற்கும், தனிநபருக்கும் அவர்களின் சொந்த எண்ணங்களை வளத்துக் கொள்வதற்கும், அவர்களது சொந்த முடிவுகளையும் கருத்துக்களையும் தேவையான தகவல்களுடன் சுதந்திரமாக வெளிப்படுத்த ஒரு ஊடகத்தின் தேவை அவசியமாகிறது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் இந்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.