Aran Sei

அல்ஜசீரா செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்லாமிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் – ஐநா மனித உரிமைகள் விசாரணையில் தகவல்

Credit: Al Jazeera

டந்த மே 11 தேதி, சுட்டுக் கொல்லப்பட்ட அல் ஜசீராவின் செய்தியாளர் ஷிரீன் அபு உடலில் இருந்தது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின் தோட்டாக்கள் என்று தகவல்கள் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷாம்தாசனி, “நாங்கள் சேகரித்த அனைத்து தகவல்களும். உயிரிழந்த அபு அக்லே மற்றும் காயமடைந்த அவரது சக ஊழியர்கள் உடலில் இருந்த துப்பாக்கி தோட்டாக்கள் இஸ்ரேலிய ஆயுத படையில் இருந்து வந்தவை, ஆயுதமேந்திய பாலஸ்தீனர்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து வந்தவை அல்ல என்பதை உறுதி செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அருகில் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனர்களின் நடவடிக்கை எதையும் வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை – மூத்த கூட்டு நாட்டை அச்சுறுத்த வேண்டாம் – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கு பகுதியில் ஜென் பகுதியில் செய்திக் கொண்டிருந்த போது, அபு அக்லே இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டார்.

கிழக்கு ஜெருசலேமில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்காணோர் கலந்து கொண்டனர் அவர்களது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அபு அக்லேவின் சவப்பெட்டி தரையில் விழுந்தது.

ஷிரின் அபுவை இஸ்ரேலிய படைகள் தான் கொன்றதாக பல சாட்சிகள் கூறினர். பல ஊடக நிறுவனங்களின் விசாரணைகளும் இதே முடிவுக்கு வந்துள்ளன.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன் பகுதியில், செய்தி சேகரிக்க சென்ற அல்ஜசீரா பத்திரிக்கையாளர் – சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படையினர்.

“ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனர்களை புறக்கணிக்க செய்தியாளர்கள் வேறு பாதையில் சென்றார்கள். தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய படைகள் தங்கள் இருப்பைக்  காண மெதுவாகச் சென்றதாக கூறினார்கள். எங்களது கண்டுபிடிப்புகளில் அந்த நேரத்தில் அந்த இடத்தில் எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. எந்த படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பதைக் குறிக்கிறது.”  ரவினா ஷாம்தாசனி கூறியுள்ளார்.

“இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் திசையிலிருந்து பல ஒற்றை, நன்கு குறிவைக்கப்பட்ட தோட்டாக்கள் அவர்களை [பத்திரிகையாளர்கள்] நோக்கிச் சுடப்பட்டன.” என்று தெரிவித்துள்ளார்.

டேனிஷ் சித்திக்கி: உண்மைக்கு ஒளியூட்டிய மக்கள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்

அபு அக்லேவின் உதவிக்கு வர முயற்சித்த நிராயுதபாணியான ஒரு நபர் மீதும், மரத்தின் பின்னால் தஞ்சமடைந்திருந்த ஒரு பத்திரிகையாளர் மீதும் தோட்டாக்கள் தொடர்ந்து வீசப்பட்டன என்று ஷாம்தாசனி மேலும் கூறியுள்ளார்.

அபு அக்லேவின் கொலைக்கு குற்றவியல் விசாரணையைத் தொடங்குமாறு இஸ்ரேலிய அதிகாரிகளை தொடர்ந்து அவர் வலியுறுத்தினார்.

Source: Al Jazeera

சாமி சொத்தை திருடினா மனசு புண்படாதா I Thillai Chidambaram Temple I Deekshithar Atrocities I DMK

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்