Aran Sei

‘பெகசஸ் ஸ்பைவேர் விவகாரம் அச்சமூட்டும் வகையில் உள்ளது’ – ஐநா மனித உரிமை ஆணையர் கண்டனம்

ஸ்ரேல் நாட்டின் பெகசஸ் ஸ்பேர்வேர் கொண்டு வேவு பார்க்கப்பட்டது மனித உரிமைக்கு எதிரானது என ஐநா மனித உரிமை ஆணையர் மிச்சேல் பாச்லேட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பெகசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலர் வேவு பார்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் அச்சமூட்டும் வகையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

பெகசஸ் ஸ்பைவேர் ஜனநாயகத்தின் மீது விழுந்த தாக்குதல் – பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்

மேலும், ”மக்களின் மனித உரிமைகளைச் சட்டவிரோத கண்காணிப்பு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவது தொடர்பான அச்சத்தை உறுதிப்படுத்துவதாக தெரிகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் பல்வேறு பகுதிகள் கவலை தெரிவிக்கின்றன என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் அத்துமீறல் புகாரளித்த பெண்: பெகசஸ் மென்பொருள் வழியாக கண்காணிப்பு

”பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களை கண்காணிக்க மென்பொருளைப் பயன்படுத்துவது, அவர்களை கைது செய்வது, அச்சுறுத்துவது மற்றும் கொலை செய்வதுடன் தொடர்புடையது. கண்காணிப்பு அறிக்கைகளின் அச்சத்தின் மூலம் மக்கள் தங்களை சுயதணிக்கை செய்து கொள்ள நிர்பந்திக்கப்படுவது போன்ற மோசமான விளைவுகளையும் கொண்டுள்ளது. பத்திரிக்கையாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் சமூகத்தில் தவிர்க்க முடியாத  பங்கை வகிக்கின்றனர், அவர்கள் அமைதிப்படுத்துவது, நம் அனைவரையும் பாதிக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பெகசஸ் ஸ்பைவேரை தவறாக பயன்படுத்தியவர்களை குற்றவாளி கூண்டிலேற்ற வேண்டும்’ – வாட்ஸ் அப் வலியுறுத்தல்

”கண்காணிப்பு நடவடிக்கைகளைக் குறுகிய வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமெ நியாயப்படுத்த முடியும் என்பதை ஒரு நியாயமான இலக்குடன் அனைத்து அரசுகளுக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன். அந்த இலக்கு அவசியமானதாகவும் விகிதாச்சாரரீதியாகவும் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்