Aran Sei

ஹுரியத் தலைவர் அஷ்ரத் செஹ்ரை சிறை மரணம் – விசாரணை கோரிய ஐ.நா. சிறப்பு அதிகாரிகள்

ஹுரியத் தலைவர் அஷ்ரத் செஹ்ரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்து காவலிலேயே மரணித்தது தொடர்பாகப் பராபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், கிலானி  உடல் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது  குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, இந்த விவகாரம் தொடர்பாகத் தனியான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும்  தெரிவித்துள்ளனர்.

இதே போன்று, பாரிஸை மையமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பும்  கிலானி மரணத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு முரணாக உள்ளது என்றுக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் கிலானியின் குடும்பம் மீதான அனைத்து துன்புறுத்தல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

ஹுரியத் அமைப்பின் முக்கியத் தலைவரான அஷ்ரத் செஹ்ரை கடந்த 2௦2௦ ஆம் ஆண்டு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் காவல்துறையின் காவலிலேயே அவர் மரணமடைந்தார். அவரது உடலை அவரது குடும்பத்தினர் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் புதைக்க விரும்பிய நிலையில், வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அஷ்ரத் செஹ்ரையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தெரிவித்த செஹ்ரையின் மகன், தனது தந்தையின் உடனான கடைசி உரையாடலின் போது  அவரது உடல் நலக்குறைவு குறித்தும் மோசமான உணவு குறித்தும் தெரிவித்தாக கூறியுள்ளார்.

இதேபோன்று, ஹுரியத் தலைவர் கிலானியின் உடலும்  ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் புதைக்கப்படாமல் காவல்துறை கைபற்றி வேறொரு இடத்தில் அடக்கம் செய்தது.

மேலும், கருத்து சுதந்திரம், அமைதியான கூட்டத்திற்கானச் சுதந்திரம், இயக்கச் செயல்பாடுகளுக்கான  சுதந்திரம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் மீதான மீறல்கள் குறித்தும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீர் மக்களில் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் காக்கப்படுவதை  இந்திய ஒன்றிய அரசு உறுதிபடுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

Source: The wire

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்