Aran Sei

போராடியப் பெண்களைத் தாக்கிய தாலிபான்கள் – ஐ.நா. சபை கண்டனம்

ப்கானிஸ்தானில் அமைதி வழியில் போராடியப் பெண்களுக்கு எதிராகத் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், தடியடி, சாட்டை மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு தாலிபான்கள் தாக்குதல் நடத்தியதன் காரணமாக நான்கு போரட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் செய்தி தொடர்பாளர் ரவினா ஷம்தசானி, “அமைதியான வழியில் போராடுபவர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையும் தாலிபன்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், பத்திரிக்கையாளர்கள் தலிபான்களால் மிரட்டலுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தின்போது செய்தி சேகரிக்க சென்ற இரண்டு பத்திரிக்கையாளர்களைத் தாலிபான்கள் கடுமையாகத் தாக்கிஇருந்தது கவனிக்கத்தக்கது.

Source: AL JAZEERA

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்